ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி  8ஆவது சீசன் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இத்தொரில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட இடம் பெறாதது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2019இல் 2ஆவது போட்டியில் விளையாடிய அவருக்கு 2021 வரை ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டும் நிலையான தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

Advertisement

இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அதன் பின் வாய்ப்பு பெற்று அயர்லாந்து தொடரில் முதல் முறையாக அரைசதம் அடித்து 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு பங்காற்றினார். ஆனாலும் சீனியர்கள் வந்ததால் தொடர்ச்சியான வாய்ப்பை பெறாத அவர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும் அவருக்கு டாட்டா காட்டிய தேர்வுக்குழு வழக்கம் போல டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இப்பொது வரை சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பந்தை மீண்டும் உலக கோப்பையில் தேர்வு செய்தது. 

Advertisement

அதனால் ஏற்பட்ட ரசிகர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக சஞ்சு சாம்சன் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நடந்த அந்தத் தொடரில் பேட்டிங்கில் அசத்திய அவர் கேப்டனாக 3 – 0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்ததால் கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் தேர்வானார்.

அதில் முதல் போட்டியில் 83 ரன்கள் குவித்து கிட்டத்தட்ட இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் எஞ்சிய 2 போட்டிகளில் 30, 2 என கடைசி வரை ஆட்டமிழக்காமல், 118 ரன்களைக் குவித்து மீண்டும் அசத்தினார். அதனால் டி20 உலக கோப்பையில் வாய்ப்பு போனாலும் அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடுவதற்கு அவர் தயாராகி வருகிறார். 

இந்நிலையில் ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறிய சஞ்சு சாம்சன் தற்போது அதில் முன்னேறியுள்ளதால் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடும் தகுதியை எட்டியுள்ளதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“தற்போது சஞ்சு சாம்சன் நிச்சயமாக என்னை அதிகமாக கவர்ந்துள்ளார். ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக செயல்படாததால் அவரது இடத்தில் எனக்கு கேள்விக்குறி இருந்தது. ஆனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டியில் கிட்டத்தட்ட இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் எஞ்சிய போட்டிகளில் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தினார். அதே சமயம் இங்கிலாந்தில் தொடரை வெல்ல உதவிய ரிஷப் பந்தின் சதத்தை நாம் எளிதாக மறந்து விட்டோம் என்று நினைக்கிறேன்”

Advertisement

ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அவர் சதமடித்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 4, 5 என அனைத்து இடங்களிலும் அவர் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படுகிறார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு போட்டியாக யாருமில்லை என்று நான் நினைக்கிறேன். 

அத்துடன் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுகிறார் என்பதாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் நீக்கப்பட வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால் தற்சமயத்தில் விளையாடுவதை வைத்து உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இருக்கலாம். ஆனால் அதற்காக ரிஷப் பந்த் நீக்கப்பட கூடாது” என்று கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News