சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பாட்டின்சன் ஓய்வு!

Updated: Wed, Oct 20 2021 15:35 IST
James Pattinson Announces Retirement From Test Cricket (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன். தற்போது 31 வயதாகும் பாட்டின்சன் ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்டுகள், 15 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

மேலும் இவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். இந்நிலையில், ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காது என்பதால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாட்டின்சன் அறிவித்துள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

காயம் காரணமாக சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால் ஆஷஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்காத சூழலில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.  இன்னும் நான்கைந்து வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும். அதனால் உள்ளூர் போட்டிகளிலும் கவுன்டி கிரிக்கெட்டிலும் விளையாடவுள்ளதாக பேட்டின்சன் கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை