தி ஹண்ரட் ஆடவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் - பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். 

Advertisement

இதன்மூலம் 100 பந்துகளில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 151 ரன்களைச் சேர்த்ததில் இதில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 68 ரன்களை சேர்த்தார். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணியில் குயின்டன் டி காக் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுமுனையில் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். 

இதன் மூலம் 98 பந்துகளில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி, இத்தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News