சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!
Jamie Smith Complete 1000 Test Runs: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களைப் பூர்த்தி செய்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
மேற்கொண்டு பிரைடன் கார்ஸ் 56 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகனது சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்துள்ள கேஎல் ராகுல் - கருண் நாயர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் அரைசதம் கடந்ததுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 1000 ரன்களையும் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
இது ஜேமி ஸ்மித்தின் 13ஆவது டெஸ்ட் மற்றும் 21ஆவது இன்னிங்ஸ் ஆகும். இந்த சாதனையின் மூலம், தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக்குடன் இணைந்து 1000 டெஸ்ட் ரன்களை நிறைவு செய்த வேகமான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜேமி ஸ்மித் பெற்றுள்ளார். முன்னதாக குயின்டன் டி காக் 21 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த வேகமான விக்கெட் கீப்பர்
- 21 இன்னிங்ஸ் - குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா)
- 21 இன்னிங்ஸ் - ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து)
- 22 இன்னிங்ஸ் - தினேஷ் சண்டிமால் (இலங்கை)
- 22 இன்னிங்ஸ் - ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து)
- 23 இன்னிங்ஸ் - குமார் சங்கக்காரா (இலங்கை)
- 23 இன்னிங்ஸ் - ஏபி டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா)
- 24 இன்னிங்ஸ் - ஜெஃப் டுஜோன் (வெஸ்ட் இண்டீஸ்)
இது மட்டுமல்லாமல், மிகக் குறைந்த பந்துகளில் 1000 டெஸ்ட் ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் ஜேமி ஸ்மித் படைத்துள்ளார். முன்னதாக பாகிஸ்தாஅன் அணியின் முன்னாள் கேப்டன் சஃப்ராஸ் காஅன் 1311 பந்துகளில் 1000 ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜேமி ஸ்மித் 1303 பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
குறைந்த பந்துகளில் 1000 டெஸ்ட் ரன்களை எடுத்த விக்கெட் கீப்பர்கள்:
- 1303 பந்துகள் - ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து)
- 1311 பந்துகள் - சர்ஃப்ராஸ் அகமது (பாகிஸ்தான்)
- 1330 பந்துகள் - ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா)
- 1367 பந்துகள் - நிரோஷன் டிக்வெல்லா (இலங்கை)
- 1375 பந்துகள் - குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா)
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர்.
Also Read: LIVE Cricket Score
இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.