ENG vs WI, 1st ODI: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; தொடக்க வீரராக களமிறங்கும் ஜேமி ஸ்மித்!

Updated: Wed, May 28 2025 20:33 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து அணி தங்களுடையா முதல் ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது.

மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டிக்காக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக ஜேமி ஸ்மித் களமிறங்குவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

அதேசமயம் ஜோஸ் பட்லர், வில் ஜேக்ஸ் மற்றும் ஜேக்கப் பெத்தல் உள்ளிட்டோர் லெவனில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜேமி ஸ்மித் தொடக்க வீரராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த இங்கிலாந்து அணியில் டாம் பான்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ் மற்றும் லுக் வுட் ஆகியோருக்கு லெவனில் வாய்ப்பு வழங்கபடவில்லை. மேலும் இது ஆதில் ரஷித்தின் 150ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், ஆதில் ரஷீத்.

Also Read: LIVE Cricket Score

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை