சஹாலின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 85 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, அதன்பின் விளையாடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் யுஸ்வேந்திர சஹாலின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
அச்சாதனையானது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக 63 விக்கெட்டுகளுடன் இருந்த யுஸ்வேந்திய சஹாலை பின்னுக்குத் தள்ளி, ஜஸ்பிரித் பும்ரா 64 விக்கெட்டுகளுடன் முதலிடத்தைப் பிடித்தார்.
Also Read: T20 World Cup 2021
மேலும் இப்போட்டியலில் இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 55 விக்கெட்டுகளுடன் 3ஆம் இடத்தில் நீடிக்கிறார்.