ஐசிசி டெஸ்ட் தரவரிசை : பும்ரா, ஷர்துல் முன்னேற்றம்; சறுக்கலில் கோலி!

Updated: Thu, Aug 12 2021 09:43 IST
Image Source: Google

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய  வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9ஆஆவது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார். 

மறுபுறம், அந்த டெஸ்டில் டக் அவுட்டான இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஓரிடம் சரிந்து 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் இப்போட்டியில் சதமடித்த ஜோ ரூட் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் ரோஹித், ரிஷப் பந்த் ஆகியோர் முறையே 6 மற்றும் 7-ஆம் இடங்களில் நிலை கொண்டுள்ளனர். ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 36-ஆவது இடத்துக்கும், கே.எல்.ராகுல் 56-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். 

 

பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 2ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் 19 இடங்கள் முன்னேறி 55-ஆவது இடத்துக்கும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஓரிடம் முன்னேறி 7ஆவது இடத்துக்கும், ஒல்லி ராபின்சன் 22 இடங்கள் முன்னேறி 46ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 
 
ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் ஜடேஜா ஓரிடம் முன்னேறி 2ஆவது இடத்தைப் பிடிக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 4-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை