யார் யார் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்? - ஆலன் டொனால்டின் பதில்!

Updated: Thu, Aug 19 2021 22:36 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட். 1991ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆலன் டொனால்ட், 2003 ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை விளையாடினார்.

அந்த குறிப்பிட்ட உலக கோப்பை தொடரில் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்க அணி துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் ஆலன் டொனால்டும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். 

இதுநாள் வரை 72 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 330 விக்கெட்டுகளையும், 164 ஒருநாள் போட்டிகளில் 272 விக்கெட்டுகளையும் ஆலன் டொனால்ட் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், சமகால கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலன் டொனால்ட், “என்னை வியக்கவைத்த வீரர்கள் என்றால் அது நியூசிலாந்து கிரிக்கெட்டர்கள் தான். 2011ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து அணி இளம் வீரர்கள் பலரை வளர்த்தெடுத்து அணியை வலுவாக கட்டமைத்துள்ளது. 

சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ, 150 கிமீ வேகத்தில் எல்லாம் வீச தேவையில்லை என்பதை நிரூபித்துள்ளார்கள் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள். அதிலும் கைல் ஜாமிசன், டிரெண்ட் போல்ட், டிம் சௌதி ஆகியோர் அபாரமான பந்துவீச்சாளர்கள்.

அதேபோல் தென்ஆப்பிரிக்காவின் அன்ரிச் நோர்ட்ஜே, இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் அருமையான பந்துவீச்சாளர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை