லார்ட்ஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா - காணொளி

Updated: Tue, Jul 08 2025 21:57 IST
Image Source: Google

Jasprit Bumrah: லண்டனில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லாண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்பதை இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் உறுதியளித்திருந்தார். இதன்மூலம் பிரஷித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டடு அவரது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடிப்பார் என தகவல்கள் வெளியாகி வ்ருகின்றனர். மேலும் இப்போட்டிக்காக ஜாஸ்பிரித் பும்ரா தனது பயிற்சியையும் இன்று தொடங்கியுள்ளார். 

தகவலின் அடிப்படையில் ஜஸ்பிரித் பும்ரா சுமார் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக பந்துவீசி பயிற்சி மேற்கொண்டதாகவும், அதில் அவர் முற்றிலும் உடற்தகுதியுடனும் தயாராகவும் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய நிலையில், அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன்பின் பணிச்சுமை காரணமாக அவருக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது. 

மேலும் ஜஸ்பிரித் பும்ரா இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடந்த டெஸ்டில் விளையாடினார், அங்கு அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம் அவர் தனது பேட்டிங்கில் ஒரே ஓவரில் 34 ரன்களைச் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் உலக சாதனையையும் படைத்தார். இதுபோன்ற சூழ்நிலையில் அவர் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை