வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Fri, Apr 12 2024 20:03 IST
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். 

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையையும் பும்ரா படைத்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் யுஸ்வேந்தி சஹாலை பின்னுக்கு தள்ளி பர்பிள் தொப்பியையும் வென்று அசத்தினார். மேலும் நடப்பு ஐபிஎல் தொட்ரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் தான் இந்தியாவைவிட்டு வெளியேறி கனடா செல்ல இருந்ததாக அவரது மனைவி சஞ்சனா கணேசன் நடத்திய சமீபத்திய நேர்காணால் ஒன்றில் பும்ரா தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் சஞ்சானா பும்ராவிடம், நீங்கள் கனடாவுக்குச் சென்று அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறீர்களா?" என்ற கேள்வியை எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த பும்ரா, “இதற்கு முன்பும் இதுபோன்ற உரையாடல்களை நாங்கள் நடத்தியுள்ளோம். இந்தியாவில் ஒவ்வொரு இளைஞனும் தன் வாழ்க்கையில் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாட விரும்புகிறான். ஒவ்வொரு தெருவிலும் இந்தியாவுக்காக விளையாட விரும்பும் 20-25 வீரர்கள் உள்ளனர். அதனால் என்னிடம் எப்போதும் ஒரு மாற்று திட்டம் இருந்தது. ஏனெனில் எனது உறவினர்கள் கனடாவில் வசிக்கின்றனர். அதன் காரணமாக நான் கனடா சென்று அங்கேயே படிப்பை முடித்துவிட்டு அங்கேயே செட்டில் ஆகலாம் என்று நினைத்தேன். இருந்தாலும், முதலில் குடும்பமாக செல்வோம் என்று நினைத்தோம், பிறகு அம்மா கனடா செல்ல விரும்பவில்லை. 

ஏனென்றால் கனடாவின் கலாச்சாரம் வேறு என்பதால் அவர் அங்கு செல்ல மறுத்தார். அதே சமயம் எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாட வாய்ப்பு வந்தது. அது மட்டும் நடைபெறவில்லை என்றால், நான் நிச்சயமாக கனடாவுக்கு சென்று கனடாவில் உள்ள கிரிக்கெட் அணிக்காக விளையாடி இருப்பேன். இந்திய அணிக்காகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் நான் இங்கு விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்று பும்ரா தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை