சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?

Updated: Wed, Aug 21 2024 14:03 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே, ஒளிபரப்பு உரிமையாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மூன்றாவது முறையாக அப்பதியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைவராக நியமிக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையைப் பெறவுள்ளார். 

மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டின் இரண்டு முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களிடம் இருந்தும் ஜெய் ஷாவை தலைவராக நியமிக்கப்ப பரிந்துரை செய்யபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்பதவிக்கு ஜெய் ஷா தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஐசிசி தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஐசிசி செய்தி தொடர்பாளர், “ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்றும், அவரது தற்போதைய பதவிக்காலம் நவம்பர் மாத இறுதியில் முடிவடையும் போது தனது பதவியில் இருந்து விலகுவார் என்றும் வாரியத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய இயக்குநர்கள் ஆகஸ்ட் 27, 2024க்குள் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை முன்வைக்க வேண்டும். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால், புதிய தலைவர் பதவிக்காலம் 1 டிசம்பர் 2024 அன்று தொடங்கும் வகையில் தேர்தல் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவின் ஜக்மோகன் டால்மியா (1997 முதல் 2000 வரை) மற்றும் ஷரத் பவார் (2010-2012) ஆகியோர் மட்டுமே இதுவரை ஐசிசியின் தலைவர் பொறுப்பை வகித்துள்ளனர். ஜெய் ஷா தேர்வு செய்யப்படும் பட்சத்தில் இப்பட்டியலில் இணையும் மூன்றாவது இந்தியராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை