Bcci secretary jay shah
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே, ஒளிபரப்பு உரிமையாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மூன்றாவது முறையாக அப்பதியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைவராக நியமிக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையைப் பெறவுள்ளார்.
Related Cricket News on Bcci secretary jay shah
-
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் மூத்த வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீரர்களுக்கு வழங்கினார். ...
-
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் ஜெர்ஸியை அறிமுக படுத்திய ரோஹித் & ஜெய் ஷா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர். ...
-
விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுப்பவர் அல்ல - ஜெய் ஷா!
தனது 15 வருட கிரிக்கெட் பயணத்தில் முதல்முறையாக ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு கோரியிருக்கிறார் என விராட் கோலியின் விடுப்பு குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஏசிசி தலைவராக ஜெய் ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஏசிசி இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24