தி ஹண்ரட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி!

Updated: Wed, May 05 2021 15:05 IST
Image Source: Google

இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இத்தொடர் கடந்த ஆண்டே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் முதலாவது சீசனில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இத்தொடரில் பங்கேற்க எல்லீஸ் பெர்ரி உள்ளிட்ட 11 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் உள்பட 24  வெளிநாட்டு வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 

இதில் இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா என நான்கு பேர் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி29 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடர் ஜூன் 16ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி முடிவடையவுள்ளது. 

இதனால் இங்கிலாந்து அணியுடான தொடரை முடித்த கையோடு நான்கு இந்திய வீராங்கனைகள், தி ஹண்ரட் தொடரில் பங்கேற்பார்கள் என்றுன் பிசிசிஐ அறிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை