மேல் முறையீட்டை வாபஸ் பெற்ற ரிஷப் பந்த்; நெகிழ்ச்சியில் கட்டியணைத்த ஜித்தேஷ் - காணொளி!

Updated: Wed, May 28 2025 14:01 IST
Image Source: Google

லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதனத்தில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜித்தேஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் போது லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் செய்த செயல் ஒன்று பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

அதன்படி இப்போட்டியில் ஆர்சிபி இன்னிங்ஸின் போது 17ஆவது ஓவரை லக்னோ வீரர் திக்வேஷ் ரதி வீசிய நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தை மயங்க் அகர்வால் எதிர்கொள்ள இருந்தார். அப்போது பந்துவீச வந்த திக்வேஷ் ரதி நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த ஜித்தேஷ் சர்ம க்ரீஸை விட்டு நகர்வதை கணித்து தனது பந்துவீச்சை நிறுத்தியதுடன் ரன் அவுட்டும் செய்தார். இதையடுத்து கள நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் மேல்முறையிட்டனர்.

அப்போது அதனை சோதித்த மூன்றாம் நடுவர் திக்வேஷ் ரதி தனது பந்துவீச்சை முழுமையாக செய்ததாக கூறி அதற்கு நாட் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதற்கிடையில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தங்களுடைய மேல்முறையிட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்ததன் காரணமாகவே நடுவர் நாட் அவுட் என்று தீர்ப்பு வழங்கினார் என்று கூறப்பட்டது. மேலும் களத்தில் இருந்த ஜித்தேஷ் சர்மாவும் ரிஷப் பந்தின் செயலை பாராட்டும் விதமாக அவரை கட்டியணைத்தார். 

ஆனால் மூன்றாம் நடுவர் ஏற்கெனவே ஜித்தேஷ் சர்மா நாட் அவுட் என்ற தீர்ப்பை வழங்கிய நிலையில், ரிஷப் பந்த் தங்களுடைய மேல்முறையீட்டை வாபஸ் பெற்றாதல் அவர் எந்த முடிவை எடுக்கவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் ரிஷப் பந்தின் இந்த செயலை ஒரு சிலர் பாராட்டவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ரிஷப் பந்தின் சதத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் ஜித்தேஷ் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 85 ரன்களைச் சேர்க்க, ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை