Jaffna Kings vs Kandy Falcons Dream11 Team: இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே மார்வெல்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

JK vs KFL: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஜாஃப்னா கிங்ஸ் vs கண்டி ஃபால்கன்ஸ்
  • இடம் - ஆர் பிரேமதாச மைதானம், கொழும்பு
  • நேரம் - ஜூலை 20, இரவு 7.300 மணி
Advertisement

JK vs KFL: Pitch Report

ஜாஃப்னா கிங்ஸ் - கண்டி ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் நடந்த பெரும்பாலான போட்டிகளில் சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 142 ரன்களாக மட்டுமே உள்ளது. இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 215 ரன்களாகும். இருப்பினும் போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

JK vs KFL Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 09
  • ஜாஃப்னா கிங்ஸ் - 05
  • கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் - 04

Jaffna Kings vs Kandy Falcons Probable Playing XI 

Advertisement

ஜாஃப்னா கிங்ஸ் உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், ரைலீ ரூஸோவ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா (கே), அஸ்மத்துல்லா ஒமர்சாய், தனஞ்செயா டி சில்வா, ஃபேபியன் ஆலன், வானுசா சஹான், தப்ரைஸ் ஷம்சி, அசித்த ஃபெர்னாண்டோ.

கண்டி ஃபால்கன்ஸ் உத்தேச லெவன்: தினேஷ் சண்டிமால், ஆண்ட்ரே ஃபிளெட்சர், முகமது ஹரிஸ், வனிந்து ஹசரங்க (கே), கமிந்து மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, ரமேஷ் மெண்டிஸ், சதுரங்க டி சில்வா, சமத் கோமஸ், முகமது ஹஸ்னைன்.

Jaffna Kings vs Kandy Falcons Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் சண்டிமால், குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள்- ரைலீ ரூஸோவ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா (துணை கேப்டன்), வனிந்து ஹசரங்க (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள் - தப்ரைஸ் ஷம்சி, முகமது ஹஸ்னைன்.
Advertisement

JK vs KFL Dream11 Prediction, JK vs KFL Dream11 Team, Lanka Premier League, Lanka Premier League 2024, Fantasy  Cricket Tips, JK vs KFL Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Jaffna Kings vs Kandy Falcons

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News