இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

Updated: Mon, Feb 05 2024 12:45 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களைக் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி முதால் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலைப்பெற்றது.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் சதத்தின் மூலமாக 255 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி கடின இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் 5ஆவது விக்கெட்டாக களமிறங்கிய ஜோ ரூட் 10 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் என 16 ரன்களைச் சேர்த்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் 16 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணிக்கேதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களையும் கடந்து ஜோ ரூட் அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்த மைல் கல்லை எட்டும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 

முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெய்டர் குக் இந்திய அணிக்கெதிராக 26 இன்னிங்ஸில் விளையாடி 1,235 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் இந்திய அணிக்கெதிராக 24 இன்னிங்ஸி விளையாடி 1,004 ரன்களை எடுத்து இப்பட்டியளில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை