ரூட்டுடன் இணைந்து விளையாட எப்போது விரும்புவேன் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Mon, Jan 03 2022 11:01 IST
Joe Root is someone I always want to play for, says Ben Stokes (Image Source: Google)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இதற்கிடையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் அவர் பதவி விலகி, பென் ஸ்டோக்ஸிற்கு கேப்டன்சி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் வழுத்து வருகின்றது. 

இதுகுறித்து பேசியுள்ள பென் ஸ்டோக்ஸ், “கேப்டன் பதவி என்பது களம் அமைப்பது, அணியைத் தேர்ந்தெடுப்பது, நடுவில் முடிவெடுப்பது போன்றவற்றை விட அதிகம். நீங்கள் வெளியே சென்று விளையாட விரும்பும் கேப்டன் யார் என்று கேட்டால், நான் விரும்பும் ஒருவர் ஜோ ரூட். அவரது கேப்டன்சியில் விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை