ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான்ர் ஆயல்ச் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - இஷான் கிஷன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ரெட்டி 30 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 34 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 45 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் நிதீஷ் ரானா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் விக்கெட்டுகள் ஏதுமின்றி 76 ரன்களைக் கொடுத்திருந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளர் எனும் மொசமான சதனையை ஜோஃப்ரா அர்ச்சர் படைத்துள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 73 ரன்களை கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது. இந்நிலையில் அதனை தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் முறியடித்துள்ளார். இந்த பாட்டியலில் கடந்த 2018ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய பசில் தம்பி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் கொடுத்த வீரர்கள்
- 0/76 - ஜோஃப்ரா ஆர்ச்சர் (RR) vs SRH, ஹைதராபாத், 2025*
- 0/73 - மோஹித் சர்மா (GT) vs DC, டெல்லி, 2024
- 0/70 - பாசில் தம்பி (SRH) vs RCB, பெங்களூரு, 2018
- 0/69 - யாஷ் தயாள் (GT) vs KKR, அஹ்மதாபாத், 2023
- 1/68 - ரீஸ் டாப்லி (RCB) vs SRH, பெங்களூரு, 2024
- 1/68 - லூக் வுட் (MI) vs DC, டெல்லி, 2024