சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா மற்றும் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்தார். அதன்படி இப்போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த பட்லர் 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்தார்.

Advertisement

சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள்

Advertisement

இந்த இன்னிங்ஸின் போது, ஜோஸ் ​​பட்லர் சர்வதேச டி20 போட்டிகளில் தனது 150 சிக்ஸர்களை அடித்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்ஸர்களை வீழ்த்திய இங்கிலாந்தின் முதல் வீரர் மற்றும் உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பட்லர் இதுவரை 131 போட்டிகளில் 120 இன்னிங்ஸ்களில் 151 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவருக்கு முன்பு, ரோஹித் சர்மா, மார்ட்டின் கப்தில் மற்றும் முகமது வாசிம் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைச் செய்துள்ளனர்.

சர்வதேச டி20 போட்டிகளில் 3500 ரன்கள்

மேற்கொண்டு இப்போட்டியில் 45 ரன்களை எடுத்ததன் மூலம் ஜோஸ் பட்லர், சர்வதேச டி20 போட்டிகளில் 3500 ரன்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் உலகின் ஆறாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் இப்போது 120 இன்னிங்ஸ்களில் 3502 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா, பாபர் ஆசாம், விராட் கோலி, பால் ஸ்டிர்லிங் மற்றும் மார்ட்டின் கப்தில் மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். இத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அவர் 56.50 என்ற சராசரியில் 113 ரன்களை எடுத்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி தற்போது 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுது இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் மூன்றாவது போட்டி நாளை (ஜனவரி 28) ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News