6,6,6,6,6 - ஹர்மீத் சிங் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய பட்லர் - வைரலாகும் காணொளி!

Updated: Mon, Jun 24 2024 08:39 IST
6,6,6,6,6 - ஹர்மீத் சிங் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய பட்லர் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதீஷ் குமார் 30 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 29 ரன்களையும், ஹர்மீத் சிங் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறி ஜோர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பில் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசிய ஜோஸ் பட்லர் 83 ரன்களைச் சேர்க்க இங்கிலாந்து அணியானது 9.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முதல் அணியாகவும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், ஹர்மீத் சிங் வீசிய ஓரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இந்நிலையில் ஜோஸ் பட்லர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளியானது வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை