ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா

Updated: Mon, Jun 09 2025 14:48 IST
Image Source: Google

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதற்காக இரு அணி வீரகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இப்போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்த இறுதிப்போட்டியில் காகிசோ ரபாடா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டின் சிறந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 4ஆவது வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். முன்னதாக ஆலன் டொனால்ட் 72 டெஸ்ட் போட்டிகளில் 330 விக்கெட்டுகளை வீழ்த்தி 4ஆம் இடத்தில் உள்ள நிலையில், காகிசோ ரபாடா 70 டெஸ்ட் போட்டிகளில் 327 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐந்தாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்

  • டேல் ஸ்டெய்ன் - 93 போட்டிகளில் 171 இன்னிங்ஸ்களில் 660 விக்கெட்டுகள்
  • ஷான் பொல்லாக் - 108 போட்டிகளில் 202 இன்னிங்ஸ்களில் 421 விக்கெட்டுகள்
  • மகாயா நிடினி - 101 போட்டிகளில் 190 இன்னிங்ஸ்களில் 390 விக்கெட்டுகள்
  • ஆலன் டொனால்ட் - 72 போட்டிகளில் 129 இன்னிங்ஸ்களில் 330 விக்கெட்டுகள்
  • ககிசோ ரபாடா - 70 போட்டிகளில் 128 இன்னிங்ஸ்களில் 327 விக்கெட்டுகள்

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க அணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமான காகிசோ ரபாடா இதுவரை 70 டெஸ்ட், 106 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 566 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் காகிசோ ரபாடா ஆறாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை