மோர்னே மோர்கல் சாதனையை முறியடிக்க உள்ள காகிசோ ரபாடா!

Updated: Mon, Oct 28 2024 22:24 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாட மோற்கொண்டு 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார். 

அதன்படி, இந்தப் போட்டியில் ரபாடா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மோர்னே மோர்கலை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்க. தற்போது வரை மோர்னே மோர்க்கல் 86 போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் நிலையில், காகிசோ ரபாடா 65 போட்டிகளில் விளையாடி 308 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மேற்கொண்டு இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் டேல் ஸ்டெயின் மற்றும் ஷான் பொல்லாக் ஆகியோர் தலா 439 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளனர். இதில் டேல் ஸ்டெயின் 93 போட்டிகளிலும், ஷான் பொல்லாக் 108 போட்டிகளிலும் இந்த சாதனையை எட்டினர். மேற்கொண்டு மகாயா நிடினி 390 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும், ஆலன் டொனால்ட் 330 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கீ, டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை