இலங்கை அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்

Updated: Fri, Jun 20 2025 16:11 IST
Image Source: Google

Kamindu Mendis in Test: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்ததன் மூலம் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார். 

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 87 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 54 ரன்களையும் சேர்த்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸில் அந்த அணி 485 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 10 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் இளம் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 87 ரன்களிச் சேர்த்து விக்கெட்டை இழந்திருந்தாலும், தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக பத்து 50+ கோர்களை அடித்த வீரர் எனும் ராய் தியாஸின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக ராய் தியாஸ் 23 இன்னிங்ஸில் 10 முறை 50+ ஸ்கோரை அடித்திருந்தார். 

Also Read: LIVE Cricket Score

ஆனால் தற்சமயம் கமிந்து மெண்டிஸ் 22 இன்னிங்ஸ்களில் 10 முறை 5+ ஸ்கோரை அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் திலிப் மெண்டிஸ் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் 12 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1271 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை