அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த காம்ரன் குலாம்!

Updated: Tue, Oct 15 2024 22:10 IST
Image Source: Google

பாகிஸ்தான் -  இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர்.

இதில் அப்துல்லா ஷபீக் 7 ரன்னிலும், அடுத்து வந்த கேப்ட்ன் ஷான் மசூத் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து சைம் அயூப் உடன் கம்ரான் குலாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதில் சைம் அயூப் 77 ரன்னிலும், அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கம்ரான் குலாம் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

அதன்பின் 118 ரன்களைச் சேர்த்த நிலையில் காம்ரன் குலாமும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்துள்ள முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இதில் முகமது ரிஸ்வான் 37 ரன்னுடனும், ஆகா சல்மான் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 2 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர் காம்ரன் குலாம் சில் சிறப்பான சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி அறிமுக டெஸ்டில் சதம் அடித்த பாகிஸ்தானின் 13ஆவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது தவிர, 4ஆவது இடத்தில் பேட்டிங் செய்யும் போது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் எனும் பெருமையையையும் காம்ரன் குலாம் பெற்றுள்ளார்.

 இதற்கு முன்பு 1982அம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுக போட்டியில் நான்காம் இடத்தில் களமிறங்கிய சலீம் மாலிக் சதமடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார். மேற்கொண்டு சர்வதேச அளவில் தனது அறிமுக போட்டியில் 4ஆம் இடத்தில் களமிறங்கி சதமடித்த 6ஆவது வீரர் எனும் பெருமியையும் பெற்றுள்ளார். அந்தவகையில், சலீம் தவிர, பட்டோடி நவாப், குண்டப்பா விஸ்வநாத், அமினுல் இஸ்லாம் மற்றும் ஃபிராங்க் ஹேய்ஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளது குறிபிடத்தக்கது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ⁠ஒல்லி போப், ⁠ஜோ ரூட், ⁠ஹாரி புரூக்,⁠ பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்),⁠ ⁠ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், ⁠மாட் பாட்ஸ், ⁠ஜாக் லீச், ஷோயப் பஷீர்

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), காம்ரன் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீல் ஜமால், நோமன் அலி, சஜித் கான், ஸாஹித் மஹ்மூத்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை