ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய ஒரு தீர்ப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 15ஆவது ஓவரின் கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங்கின் அடித்த பந்தை லாங் ஆன் பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கருண் நாயர் கேட்ச் பிடித்த நிலையில், அவரால் சரியான பேலன்ஸ் பண்ணமுடியாமல் பந்தை மீண்டு மைதானத்திற்கு தூக்கி எறிந்தார். ஆனாலும் அவர் அந்த பந்தை தூக்கி போடும் முன்பே பவுண்டரி எல்லையை தொட்டிருந்தார்.

Advertisement

இதனால் கருண் நாயரே அதனை சிக்ஸர் என்று அறிவித்திருந்தார். இருப்பினும் கள நடுவர்கள் பவுண்டரி சென்றதா இல்லையா என்பதை உறுதிசெய்ய மூன்றாம் நடுவரை அனுகினர். பின்னர் அதனை சரிபார்த்த மூன்றாம் நடுவர் காணொளியை சரிபார்த்த பின்னர் அதனை சிக்ஸர் என்று அறிவித்தார். ஆனால் காணொளியை சரிபார்க்கும் போதே கருண் நாயரின் கால் பவுண்டரி லைனில் பட்டது தெளிவாக தெரிந்திருந்தது.

மேலும் கருண் நாயரும் அதனை சிக்ஸர் என்றே கூறியிருந்தார். இருப்பினும் மூன்றாம் நடுவர் சிக்ஸர் என்று அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், நடுவரின் இந்த தீர்ப்புக்கு விமர்சனங்களும் எழுந்தது. மேலும் வர்ணனையாளர்களும் நடுவரின் முடிவிற்கு அதிருப்தியை தெரிவித்தனர். இதனால் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது.

Also Read: LIVE Cricket Score

Advertisement

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேஎல் ராகுல் 35 ரன்னிலும், டூ பிளெசிஸ் 23 ரன்னிலும், செதிகுல்லா அடல் 22 ரன்னிலும், கருண் நாயர் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை களத்தில் இருந்த சமீர் ரிஸ்வி 3 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News