KCL 2025: சஞ்சு சாம்சன் அதிரடி வீண்; கொச்சியை வீழ்த்தி திருச்சூர் த்ரில் வெற்றி!
Sanju Samson: திருச்சூர் டைட்டன்சுக்கு எதிரான கேசிஎல் லீக் போட்டியில் கொச்சி புளூ டைகர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 89 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் அறிமுக சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் திருச்சூர் டைட்டன்ஸ் மற்றும் கொச்சி புளூ டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணிக்கு தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்கியதுடன், அதிரடியான தொடக்கத்தையும் வழ்ங்கினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் மனோகரன் 5 ரன்னிலும், முகமது ஷானு 24 ரன்னிலும், நிகில் 18 ரன்னிலும், கேப்டன் சாலி சாம்சன் 16 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் மறுபக்கம் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் இந்த போட்டியில் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்க்ளுடன் 89 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்ததுடன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கொச்சி புளூ டைகர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே எடுத்தது. திருச்சூர் அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அஜினாஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய திருச்சூர் அணியிலும் ஆனந்த், ஷான் ரோஜர், விஷ்னு மேனன் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆனால் மற்றொரு தொடக்க வீரரான அஹ்மத் இம்ரான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் இந்த போட்டியில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்து இம்ரான் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சிஜொமன் ஜோசப் மற்றும் அர்ஜுன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதில் சிஜொமன் ஜோசப் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களையும், அர்ஜுன் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்களையும் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்மூலம் திருச்சூர் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொச்சி புளூ டைகர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.