WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு லெவனில் இடம்!

Updated: Wed, Aug 07 2024 14:01 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 07) டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விளையாடும் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் இத்தொடரானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாகவும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இதனல் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் கேசி கார்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த அணியில் ஜோஷுவா டா சில்வா, அலிக் அதானஸ், ஜேசன் ஹோல்டர், காவெம் ஹட்ஜ், மைக்கைல் லூயிஸ் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் வேகப்பந்து வீச்சாள் கீமார் ரோச் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். 

ஆனால் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசபிற்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் வலிமை வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படி சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: கிரேக் ப்ராத்வைட் (கேப்டன்), மைக்கேல் லூயிஸ், கேசி கார்டி, அலெக் அதானாஸ், காவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், கீமார் ரோச், ஜோமல் வாரிக்கன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை