CT 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த முன்னாள் வீரர்கள்!

Updated: Wed, Feb 19 2025 10:21 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடரில் எந்தெந்த அணிகாள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற தங்கள் கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சில் ஒன்றி பங்கேற்ற இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய அணியின் முரளி விஜய், ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் பங்கர் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோரும் தங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். 

இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு 'இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா' அணிகள் முன்னேறும் என்று கணித்துள்ளார். அதேசமயம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் 'இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதில் விளையாடும் என்று கூறியுள்ளார்.  அவரின் கருத்தை சஞ்சய் பங்கரும் ஏற்றார்.

அதேசமயம் பிரபல வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, 'இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான்' அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கூறிய நிலையில், மற்றொரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான தீப் தாஸ்குப்தா தனது கணிப்பில் 'இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து'  அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்த நிபுணர்களின் கணிப்புகள்

  • கெவின் பீட்டர்சன் - இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
  • முரளி விஜய் - இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
  • ஆகாஷ் சோப்ரா - இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான்
  • சஞ்சய் பங்கர் - இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா
  • தீப் தாஸ் குப்தா - இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை