ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற ஐஎல்டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கீரென்ன் பொல்லார்ட் ஒரு சிறப்பு டி20 சாதனையைப் படைத்தார். டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடிய கீரென் பொல்லார்ட், 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.
இந்த இன்னிங்ஸின் போது, பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் தனது 900 சிக்ஸர்களை நிறைவு செய்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் எனும் சதனையையும் படைத்துள்ளார். அதன்படி வைப்பர்ஸ் அணி வீரர் பெர்குசன் வீசிய இன்னிங்ஸின் 19ஆவது ஓவரின் முதல் பந்திலேயே பொல்லார்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு முன்பு, கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்த வடிவத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்
- கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 1056 சிக்ஸர்கள் (455 இன்னிங்ஸில்)
- கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 901 சிக்ஸர்கள் (613 இன்னிங்ஸ்)
- ஆண்ட்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்) - 727 சிக்ஸர்கள் (456 இன்னிங்ஸில்)
- நிக்கோலஸ் புரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 592 சிக்ஸர்கள் (350 இன்னிங்ஸில்)
- காலின் முன்ரோ (நியூசிலாந்து) - 550 சிக்ஸர்கள் (415 இன்னிங்ஸில்)
இந்தப் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கீரன் பொல்லார் 36 ரன்களையும், தொடக்க வீரர் குசல் பெரேரா 33 ரன்களையும் சேர்த்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ஃபகர் ஜமான் 52 பந்துகளில் 67 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 34 ரன்களையும், சாம் கரண் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூல டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19.1 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.