Desert vipers vs mi emirates
ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற ஐஎல்டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கீரென்ன் பொல்லார்ட் ஒரு சிறப்பு டி20 சாதனையைப் படைத்தார். டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடிய கீரென் பொல்லார்ட், 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.
இந்த இன்னிங்ஸின் போது, பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் தனது 900 சிக்ஸர்களை நிறைவு செய்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் எனும் சதனையையும் படைத்துள்ளார். அதன்படி வைப்பர்ஸ் அணி வீரர் பெர்குசன் வீசிய இன்னிங்ஸின் 19ஆவது ஓவரின் முதல் பந்திலேயே பொல்லார்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு முன்பு, கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்த வடிவத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
Related Cricket News on Desert vipers vs mi emirates
-
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான் அதிரடியில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24