டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பொல்லார்ட்!

Updated: Wed, Sep 01 2021 17:28 IST
Kieron Pollard becomes second player to cross 11,000 runs in T20s (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டு. இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

இதில் நேற்று நடைபெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது நான்காவது வீரராக களமிறங்கிய பொல்லார்ட் 41 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன் மூலம் கீரேன் பொல்லார்ட், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். முன்னதாக கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 11 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை