இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். உலகின் தலைசிறந்த டி20 வீரர்களில் ஒருவராக இருந்து வரும், அவர் தற்போது ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 2 பேட்ஸ்மேனாகவும் அங்கம் வகித்து வருகிறார். மேற்கொண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் பற்றி மிகப்பெரும் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் ஐபிஎல் 2025 தொடருக்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சூர்யகுமார் யாதவை தங்கள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் படி சூர்யாவுக்கு கேகேஆர் அணியானது அணியை வழிநடத்தும் முறைசாரா சலுகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

மேற்கொண்டு, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் அணிக்கு கோப்பையை வாங்கிக்கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் கழட்டிவிட முற்பட்டு வருவதுடன், சூர்யகுமார் யாதவிற்கு அந்த பொறுப்பை வழங்க முன் வந்துள்ளது. ஆனால் சூர்யகுமார் யாதவ் கேகேஆருக்கு திரும்ப விரும்புகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதால் சூர்யகுமாரின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது தவிர, நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியிலும் ஒரு அங்கமாக இருந்தார் என்பதும் குறுப்பிடத்தக்கது. அதேசமயம் சூர்யகுமார் யாதவ் தனது ஆரம்ப கால ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஒரு அங்கமாக இருந்ததுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

 

அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தபோது, ​​சூர்யகுமார் யாதவ் அந்த அணியின் துணை கேப்டனாக இருந்தார். ஆனால் 2024 சீசனில் ஹர்திக் பாண்டியாவின் வருகையுடன் எல்லாம் மாறியது. முதலில் ரோஹித்துக்குப் பிறகு அடுத்த மும்பை அணியின் கேப்டனாக கருதப்பட்ட சூர்யகுமார் யாதவை அந்த அணி நிர்வாகம் புறக்கணித்ததுடன், தங்கள் அணியின் கேப்டனாகவும் பாண்டியாவை கேப்டனாக்கியது.

Advertisement

ஆனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது பெரிதளவில் சோபிக்க தவறியதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் முதல் அணியாக இழந்தது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவை அந்த அணி கேப்டன் பொறுப்பில் தக்கவைக்குமா என்ற கேள்விகளும் உள்ளன. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் சூர்யகுமார் யாதவை அடுத்த கேப்டனாக நியமிக்க விரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News