Kolkata Knight Riders vs Chennai Super Kings Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

KKR vs CSK Match Details

  • மோதும் அணிகள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் -   ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா
  • நேரம் - மே 07, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Eden Gardens, Kolkata Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 57ஆவது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 13 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 8 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 153 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 201 ரன்கள் உள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

KKR vs CSK: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

KKR vs CSK Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 31
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 19
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 11
  • முடிவில்லை - 01

KKR vs CSK Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மனுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ஆயுஷ் மாத்ரே, அஜிங்க்யா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, டெவால்ட் ப்ரீவிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல்
  • பந்துவீச்சாளர்கள் - மத்திஷ பத்திரனா, வருண் சக்ரவர்த்தி, நூர் அஹமத்
Advertisement

KKR vs CSK Predicted Playing 11

Kolkata Knight Riders - ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மொயின் அலி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

இம்பாக்ட் வீரர் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி.

Advertisement

Chennai Super Kings XI: ஆயுஷ் மத்ரே, ஷேக் ரஷித், சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதிஷா பத்திரனா.

இம்பாக்ட் வீரர் - ஷிவம் துபே.

KKR vs CSK Dream11 Prediction, KKR vs CSK, KKR vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, KKR vs CSK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Kolkata Knight Riders vs Chennai Super Kings

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News