இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5  போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன. இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - மதியம் 3.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இரு அணிகளிலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கான என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த ஐபிஎல் தொடரில் இங்கு நடைபெற்ற முதல் போட்டியிலேயே 200 ரன்களுக்கு மேல் விளசப்பட்டுள்ளதால், பேட்டர்களுக்கும் இது சிறப்பான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 03
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 00

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பில் சால்ட், சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், அனுகுல் ராய், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, குர்னால் பாண்டியா, அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் – குயின்டன் டி காக், கே.எல் ராகுல், நிக்கோலஸ் பூரன், பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - ரின்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல் (துணை கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ரவி பிஷ்னோய், வருண் அரோரா.

KKR vs LSG IPL 2024 Dream11 Prediction, Today Match KKR vs LSG, KKR vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs LSG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Kolkata Knight Riders vs Lucknow Super Giants

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News