Kolkata Knight Riders vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றிக்கு பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

KKR vs LSG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - ஏப்ரல் 07, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

KKR vs LSG Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 15 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 13 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 8 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 153 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 201 ரன்கள் உள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

KKR vs LSG: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

KKR vs LSG Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 05
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 03
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 02

KKR vs LSG Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, மிட்செல் மார்ஷ் (துணை கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆயுஷ் பதோனி, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், எய்டன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி.
Advertisement

Kolkata Knight Riders vs Lucknow Super Giants Probable Playing XI

Kolkata Knight Riders Probable Playing XI: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மொயீன் அலி, ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

இம்பாக்ட் பிளேயர் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி.

Advertisement

Lucknow Super Giants Probable Playing XI: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங்.

இம்பாக்ட் பிளேயர் - ரவி பிஷ்னோய்.

KKR vs LSG Dream11 Prediction, KKR vs LSG, KKR vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, KKR vs LSG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Kolkata Knight Riders vs Lucknow Super Giants

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News