Kolkata Knight Riders vs Mumbai Indians, IPL 2024 Dream11 Team: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நாளை நடைபெறும் 60ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் புள்ளிப்பட்டியலில் தங்ளது முதலிடத்தை தக்கவைக்க கேகேஆர் அணியும் போராடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

KKR vs MI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

KKR vs MI, Pitch Report

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியிலும் அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர் இருப்பதால் அவர்களும் மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

KKR vs MI Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 33
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 10
  • மும்பை இந்தியன்ச் - 23

KKR vs MI: Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Kolkata Knight Riders vs Mumbai Indians Probable Playing XI

Kolkata Knight Riders Probable Playing XI: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

Advertisement

Mumbai Indians Probable Playing XI: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் தீர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.

KKR vs MI, Dream11 Team

விக்கெட் கீப்பர் - பில் சால்ட், இஷான் கிஷன்
பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), திலக் வர்மா, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி
ஆல்ரவுண்டர் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ஹர்திக் பாண்டியா
பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

Advertisement

KKR vs MI Dream11 Prediction, Today Match Prediction, Today Match KKR vs MI, KKR vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs MI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Kolkata Knight Riders vs Mumbai Indians

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News