Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, IPL 2025: உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் நாளை (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இதில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

KKR vs RCB: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் -   ஈடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கத்தா
  • நேரம் - மார்ச் 22, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

KKR vs RCB Pitch Report

ஐபிஎல் 2025 இன் முதல் போட்டி கேகேஆரின் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இந்த மைதானத்தில் 93 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன, அவற்றில் 55 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் இங்கு 13 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில், 8 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 153 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 201 ரன்கள் குவிக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

KKR vs RCB: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

KKR vs RCB Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 34
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 20
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 14

KKR vs RCB Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (துணை கேப்டன்), ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ராஜத் படிதர்
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், லியாம் லிவிங்ஸ்டன்
  • பந்து வீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
Advertisement

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru Probable Playing XI

Kolkata Knight Riders Probable Playing XI : சுனில் நரைன், குயின்டன் டி காக், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஆன்ட்ரிச் நோர்ட்ஜே, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

இம்பேக்ட் பிளேயர் - அங்கிரிஷ் ரகுவன்ஷி

Advertisement

Royal Challengers Bengaluru Probable Playing XI: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்ட்யா, ரசிக் சலாம், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.

இம்பேக்ட் பிளேயர் - சுயாஷ் சர்மா.

KKR vs RCB Dream11 Prediction, KKR vs RCB, KKR vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, KKR vs RCB Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News