ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Apr 15 2024 14:37 IST
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

இந்தியாவில் நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - ஈடன் கார்டனஸ், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இரு அணிகளிலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கான என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த ஐபிஎல் தொடரில் இங்கு நடைபெற்ற முதல் போட்டியிலேயே 200 ரன்களுக்கு மேல் விளசப்பட்டுள்ளதால், பேட்டர்களுக்கும் இது சிறப்பான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 14
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 13
  • முடிவில்லை - 01

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கே), ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா.

ராஜஸ்தான் ராயல்ஸ் : சஞ்சு சாம்சன் (கே), ஜோஸ் பட்லர், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், நந்த்ரே பர்கர், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்), பில் சால்ட்
  • பேட்டர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள்: சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள்: டிரென்ட் போல்ட், வருண் சக்ரவர்த்தி

KKR vs RR IPL 2024 Dream11 Prediction, Today Match KKR vs RR, KKR vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, KKR vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Kolkata Knight Riders vs Rajasthan Royals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை