ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!

Updated: Tue, Apr 16 2024 14:14 IST
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில்  எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ச் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் பில் சால்ட், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கும் தனது ஃபார்மிற்கு திரும்பி விட்டார். அவருடன் ரஸல், நரைன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா போன்ற வீரர்களும் பந்துவீச்சில் இருப்பதால் அந்த அணியில் பெரிதளவில் மாற்றங்கள் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சொந்த ஊரில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமாகும். 

கேகேஆர் உத்தேச லெவன்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கே), ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளை குவித்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.  கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார்களா என்பது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஜெய்ஸ்வால், ஷிம்ரான் ஹெட்மையர், டிரென்ட் பவுல்ட், யுஸ்வேந்திர சாஹல் என்று நட்சத்திர வீரர்கள் இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வலுவாகவே உள்ளது.

ஆர்ஆர் உத்தேச லெவன்: சஞ்சு சாம்சன் (கே), ஜோஸ் பட்லர், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், நந்த்ரே பர்கர், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை