ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் கேஎல் ராகுல்!

Updated: Sat, Apr 19 2025 16:39 IST
Image Source: Google

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அபிஷேக் போரல் மற்றும் கருண் நாயர் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அதிரடியாக தொடங்கிய அபிஷேக் போரல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுலும் தனது பங்கிற்கு 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரரான கருண் நாயரும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் இணைந்துள்ள கேப்டன் அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் கேஎல் ராகுல் ஒரு சிக்ஸரை அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 200ஆவது சிக்ஸரை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 சிக்ஸர்களை அடித்த 6ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார். 

ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் (இந்தியர்கள்)

  • 286 - ரோஹித் சர்மா (258 இன்னிங்ஸ்)
  • 282 - விராட் கோலி (251 இன்னிங்ஸ்)
  • 260 - எம்.எஸ். தோனி (236 இன்னிங்ஸ்)
  • 216 - சஞ்சு சாம்சன் (170 இன்னிங்ஸ்)
  • 203 - சுரேஷ் ரெய்னா (200 இன்னிங்ஸ்)
  • 200* - கே.எல். ராகுல் (129 இன்னிங்ஸ்)

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா.

இம்பேக்ட் வீரர்கள் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர், கரீம் ஜனத்

டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்: அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல்(கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.

Also Read: Funding To Save Test Cricket

இம்பேக்ட் வீரர்கள் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், தர்ஷன் நல்கண்டே, சமீ ரிஸ்வி, டொனோவன் ஃபெரீரா, துஷ்மந்த் சமிரா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை