ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இருந்து விலகும் கேஎல் ராகுல்?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கொண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த், அடுத்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இருந்து விலகயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அவரை ஏலத்திற்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ரிஷப் பந்த் தலைமையின் கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக செயல்படாத காரணத்தால் அவரை அணியில் இருந்து நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .
இதனால் எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மற்றுமொரு செய்தியானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது. அதன்படி, கடந்த மூன்று சீசன்களாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் எதிர்வரவுள்ள ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தவறியது. அதுமட்டுமில்லால் லீக் போட்டியின் போது அணியின் கேப்டன் கேஎல் ராகுலை அந்த அணியின் உரிமையாளர் அனைவரும் பார்க்கும் வண்ணம் தரைகுறைவாக நடத்தியது என பல்வேறு சர்ச்சைகள் உருவானது. இதனால் இந்த தொடரின் பாதியிலேயே கேஎல் ராகுல் அணியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆனாலும், அவர் எஞ்சியிருந்த போட்டிகளுக்கும் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் லக்னோ அணியில் இருந்து விலக முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அவர் ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தமாகவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. ஆனாலும் இந்த தகவலானது உறுதிப்படுத்தப்படாததால், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.