சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் கேஎல் ராகுல்?

Updated: Thu, Mar 27 2025 13:15 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற இருக்கும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இநிந்லையில் இத்தொடரில் அக்ஸர் படேல் தலைமையில் களமிறங்கியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி மார்ச் 30ஆம் தேதி தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 

இநிந்லையில் இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கேஎல் ராகுல் தனது குழந்தை பிறப்பின் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார். 

அந்தவகையில் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி இணைக்கு பெண் குழந்தைப் பிறந்தது. இதனை கேஎல் ராகுல் அவர் தனது சமூக வலைதளப்பதிவின் மூலம் அறிவித்திருந்தார். இதன் காரணமாகவே அவர் இந்த சீசனின் முதல் போட்டியை தவறவிட்டார். ஆனால் இப்போது அவர் மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸுடன் இணைவதுடன், இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளிலும் பங்கேற்பார் என்பது உறுதியாகியுள்ளது. 

கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல், ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஏலத்தில் பங்கேற்ற கேஎல் ராகுலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை