SA vs IND: இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்!

Updated: Sat, Dec 18 2021 14:53 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கிற்கு சென்றடைந்தது. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் இத்தோடரிலிருந்து விலகினார்.

இதனால் அஜிங்கியா ரஹானே இந்த தொடரின் துணைக்கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் அணிக்கும் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை