சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லக்னோ அணி கேப்டன் & உரிமையாளர் - வைரலாகும் புகைப்படம்!

Updated: Tue, May 14 2024 16:28 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கடந்த போட்டியில் லக்னோ அணியானது சன்ரைசர்ஸ் அணியிடம் படுதோல்வியைச் சந்திதுள்ளது.

இந்நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இக்காணொளியானது இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின. 

அதன்பின் கேஎல் ராகுல் அணியினருடன் பயணிக்காமல் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவர்  நேற்றைய தினம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அணியினருடன் சேர்ந்து பயனிக்கவில்லை என்ற தகவல்களும் வெளியாகின. இதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் எழுந்தன.

இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கேஎல் ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் அன்பு பாராட்டிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இருவர்களது புகைப்படங்களானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை