அணி வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய விராட் கோலி - வைரல் காணொளி!

Updated: Sat, Nov 05 2022 19:51 IST
Image Source: Google

ஜிம்பாப்வே போட்டிக்கு தயாராகும் விதமாக மெல்போர்னில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விராட் கோலி சக அணி வீரர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழா காணொளி பிசிசிஐ தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதல் விராட் கோலி தனது வெற்றிக்கு காரணமாக இருந்த நபருக்கு கேக் ஊட்டி விட்டு கொண்டாடினார்.

விராட் கோலி கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் 2022 செம்படம்பர் மாதம் வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறை கூட சதம் விளாசவில்லை. தாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூட விராட் கோலி பல பேட்டியில் கூறி இருந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2 மாதங்கள் விலகி இருந்தார்.

இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் மனோ தத்துவ நிபுணராக மீண்டும் பணியில் சேர்ந்தார் பேடி அப்டான். பேடி அப்டான் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அதன் பிறகு டிராவிட்டின் அறிவுறுத்தலின் படி, பேடி உப்டான் இந்திய அணியில் வந்து இணைந்தார்.

அதன் பிறகு பேடி அப்டானுடன் விராட் கோலி இணைந்து பணிபுரிய தொடங்கினார். அதன் பிறகு விராட் கோலி தனது மன சிக்கலில் இருந்து விலகி தற்போது தான் பழைய விராட் கோலியாக திரும்பினார். விராட் கோலியின் மன சிக்கல் தீர்ந்த உடன், அவருடைய பேட்டிங்கிலும் ரன்கள் வர தொடங்கின. தற்போது பழைய கிங் கோலியாக இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்து வருகிறார்.

இதனால் தனது வெற்றியை கொண்டாடும் விதமாக பாடி அப்டானுக்கு தான் கோலி கேக் வெட்டி ஊட்டினார். இந்த நிலையில், விராட் கோலியின் பிறந்த நாள் விழாவில் ரோஹித் சர்மா மட்டும் பங்கேற்கவில்லை. ரோஹித்தை தவிர மற்ற அனைத்து வீரர்களும் இருந்தனர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை