இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. 

Advertisement

ஐசிசி முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவதால், இந்த இறுதிப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளது. அதாவது, விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ளார். அதில் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும், டெஸ்ட்டில் 27 சதங்களும் அடித்துள்ளார். இதில் கேப்டனாக 41 சதங்கள் அடித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 41 சதங்கள் அடித்ததே தற்போது வரை உலக சாதனையாக உள்ளது. 

இதனால் தற்போது நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News