ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த  27ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

Advertisement

முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்5 விக்கெட்டுக்கு 189 ரன்களை குவித்தது. மேக்ஸ்வெல் 55 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து ஆடிய டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Advertisement

இந்நிலையில் போட்டி முடிந்தபின் தினேஷ் கார்த்திக்கிடம் விராட் கோலி சிறப்பு நேர்காணல் நடத்தினார். 

அப்போது பேசிய அவர்,“நான் இதுபோன்ற நேர்காணலை அதிகம் செய்யவில்லை. இன்று இதை செய்வதற்கு ஒரு சிறப்பான இரவு. இதுவரை இந்த தொடரின் 'மேன் ஆப் தி ஐபிஎல்' நாயகனுடன் நான் இங்கே இருக்கிறேன்.

அவர் மிகப்பெரிய லட்சியத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் பெங்களூருவுக்காக மட்டுமல்ல, இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் அவர் தன்னை நிரூபித்துள்ளார்.

உங்கள் ஆட்டத்தைப் பார்த்து ஏபி டிவில்லியர்ஸ் நிச்சயம் பெருமைப்படுவார்” என புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News