நான் இருந்திருந்தால் விராட் கோலி 30 சதங்களை கூட தாண்டியிருக்க மாட்டார் - ஷோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு!

Updated: Thu, Mar 23 2023 20:08 IST
"Kohli wouldn't have scored 30 or 50 centuries if he was playing during my days" - Shoaib Akhtar (Image Source: Twitter)

உலகத்தின் சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்றால் அது சச்சினா? விராட் கோலியா? என பல காலம் விவாதம் நடைபெற்று வருகிறது. சச்சினின் மகத்தான சாதனையை விராட் கோலி ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார். இதுவரை கிரிக்கெட் விளையாடுவதில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது விராட் கோலி 75 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி 497 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 25,321 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 130 முறை அரை சதம் கடந்திருக்கிறார். மேலும் உலக அளவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ஆறாம் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி இன்னும் ஆறு ஆண்டுகள் விளையாடினால், சச்சின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி விளையாடிய காலம் வேறு? சச்சின் விளையாடிய காலம் வேறு என்றும் அதனை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், “விராட் கோலி நான் விளையாடும் காலங்களில் கிரிக்கெட் ஆடி இருந்தால் அவரால் 30 முதல் 50 சதங்களை கூட எட்டியிருக்க முடியாது . தான் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததாகவும் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக ரன்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

நான் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் போன்ற திறமையான மேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களைப் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளைடாடி இருந்தால் விராட் கோலியால் இவ்வளவு சதங்களை எடுத்து இருக்க முடியாது. அவரால் 30 அல்லது 50 சதங்களை ஏற்றுவது கூட மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் எடுத்திருக்கும் சதங்கள் திறமையானதாக இருந்திருக்கும் ஏனென்றால் அது ஒரு தரமான பந்துவீழ்ச்சிக்கு எதிராக அடிக்கப்பட்ட ரண்களாக இருந்திருக்கும்” என கூறி இருக்கிறார்.

விராட் கோலி மற்றும் ஷோயிப் அக்தர் ஒரே ஒரு முறை ஆசிய கோப்பை 2010 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலி அந்த ஆட்டத்தில் முன்பே பெவிலியன் திரும்பியதால் ஷொயப் அக்தர் அவருக்கு பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை