ஐபிஎல் 2022 தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம், புனே
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சென்னை அணியை எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா. 2வது ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க அந்த அணி கடுமையாக போராடும்.

ஆண்ட்ரூ ரஸல், ரகானே, சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ரானா, ஸ்ரேயாஸ் அய்யர் என பலரும் பேட்டிங்கில் தங்கள் பங்களிப்பை அளிப்பதால், பேட்டிங் யூனிட் வலுவாகவே திகழ்கிறது. 3 ஆட்டங்களாக சிறப்பாக விளையாடாமல் இருக்கும் வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன் ஆகியோரும் தங்கள் பார்முக்கு திரும்பினால் மும்பைக்கு பெரும் தலைவலியாக கொல்கத்தா உருவெடுக்கும். 

கொல்கத்தா அணிக்கு இப்போது அசுர பலமாக திகழ்வது பார்முக்கு வந்துள்ள உமேஷ் யாதவின் வேகப் பந்துவீச்சு. மும்பை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக உமேஷ் இருப்பார். டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி என மேலும் பல நட்சத்திர வீரர்களை வைத்திருப்பதால் மும்பையை முடக்கிப்போட கொல்கத்தா கடைசிவரை போராடும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

மும்பை இந்தியன்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி பரிதாபத்துக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக 177 ரன்கள் குவித்த போதிலும், அவர்களை கட்டுப்படுத்த இயலாமல் தோல்வியை தழுவியது. 

2ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் 193 ரன்களை குவிக்க, இலக்கை எட்ட முடியாமல் 170 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. தோல்விப் பயணத்திற்கு முடிவுரை எழுத மும்பை முழு உத்வேகத்துடன் களமிறங்கும். இஷான் கிஷான், திலக் வர்மா ஆகிய இரு இளம் வீரர்களும் மும்பைக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர். பேட்டிங்கில் இருவரும் மிக அபாரமாக விளையாடி வருகின்றனர்.

இவர்களுடன் ரோகித ஷர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட் ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாடினால், அணி இமாலய ஸ்கோரை தொட்டு நிற்கும். சூர்ய குமார் யாதவ் அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் இணையும் பட்சத்தில், மும்பை அணியின் பேட்டிங் மேலும் வலுவானதாக மாறும். பெற்ற இரு தோல்விகளிலும் மும்பை கோட்டை விட்ட இடம் “பந்துவீச்சு”. 

Advertisement

ஒரு போட்டியில் சரியாக பந்து வீசியவர்கள் அடுத்த போட்டியில் படுமோசமாக பந்துவீசியதால், நிலையான பவுலிங் லைன் அப்பை கட்டமைக்க இயலாமல் அணி திணறுகிறது. பும்ரா, டைமல் மில்ஸ், முருகன் அஸ்வின் ஆகியோர் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்பதில்தான் மும்பையின் வெற்றி அடங்கியுள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • கொல்கத்தா வெற்றி - 7
  • மும்பை வெற்றி - 22

உத்தேச ஆடும் லெவன்:

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், சிவம் மாவி, உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்ரவர்த்தி

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், அன்மோல்பிரீத் சிங்/ சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ்/ ரிலே மெரிடித், முருகன் அஷ்வின், டைமல் மில்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி/ ஜெய்தேவ் உனாத்கட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, நிதிஷ் ராணா
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல்
  • பந்துவீச்சாளர்கள் - முருகன் அஸ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ்.
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News