சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் நேற்று நடைபெற்றது .

Advertisement

இப்போட்டியில் கொனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியும், தோயம் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஒடிசா அணிக்கு ரிச்சர்ட் லெவி மற்றும் முனவீரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிச்சர்ட் லெவி 6 ரன்களிலும், மனவீரா 18 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நவீன் ஸ்டெவர்ட்8 ரன்களுக்கும், யூசுஃப் பதான் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கெவின் ஓ பிரையன் மற்றும் கேப்டன் இர்ஃபான் பதான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியி இறங்கினர். 

Advertisement

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் ஓ பிரையன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களை எட்டியது. அப்போது 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெவின் ஓ பிரையன் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இர்ஃபான் பதான் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஒடிசா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது. 

ஹைதராபாத் அணி தரப்பில் ஸ்டூவர்ட் பின்னி 2 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் மற்றும் இசுரு உதானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு சாத்விக் வால்டன் மற்றும் ஜார்ஜ் வொர்க்கர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வொர்க்கர் 8 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து 10 ரன்களைச் சேர்த்திருந்த சாத்விக் வால்டனும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிக்கி கிளார்க் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய ரிக்கி கிளார்க்கும் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 67 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோயம் ஹைதராபாத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன, எல்எல்சி தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News